காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை எதிர்த்து தாக்குதல் நடத்த முயற்சித்தாலும், இந்தியா ராணுவம் அதனை வெற்றி பெறாமல் தடுத்தது. மேலும், பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ அடுக்குகள் மீது இந்தியா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டது. இதன்பிறகு நான்கு நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த எல்லை மோதல் நிலைமை தொடர்ந்த போதும், பாகிஸ்தான் அரசியல் சூழலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு எதிராக, இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த கட்சி மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோருக்கு எதிராக இதை பரிசீலித்து வருகின்றனர்.
தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அசாத் கைசர், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து உறுதி செய்தார். அவர் கூறுகையில், கடந்த காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் காரணமாக இந்த திட்டத்தை தற்காலிகமாக பின்வாங்கியதாயினும், தற்போதைய பதட்டம் குறைந்ததால் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க உள்ளனர்.