இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

Siva

வியாழன், 15 மே 2025 (18:28 IST)
இந்தியா பாகிஸ்தான் போர் என்னால் தான் நின்றது என்றும், இரு நாடுகளிடமும் போரை நிறுத்தினால் தான் வர்த்தகத்தை தொடர்வேன் என்று கூறினேன். உடனே போரை நிறுத்தி விட்டார்கள் என்றும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் இன்று அவர் தற்போது அது மாதிரி சொல்லவில்லை என யூடர்ன் அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
“என்னால் தான் போர் நின்றது” என்று நான் சொல்லவில்லை, ஆனால் அதே நேரத்தில் போர் நிற்பதற்கு நானும் சில உதவிகள் செய்தேன் என்று தற்போது கூறியுள்ளார். இதை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு டிரம்ப் காரணமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே அமெரிக்கா இந்த போர் நிறுத்தத்துக்கு காரணம் இல்லை  என்று இந்தியா கூறிவந்த நிலையில், தற்போது அது உண்மை ஆகி உள்ளது. மேலும், இந்தியா தான் தன்னிச்சையாக இந்த போரை பாகிஸ்தான் வேண்டுகோளுக்காக நிறுத்தி உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அமெரிக்க அதிபரின் இந்த திடீர் பல்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்