இந்தி மொழியை உலகம் முழுவதும் வளர்க்க ரூ.8.2 கோடி நிதி: ஐ.நா.வுக்கு வழங்கிய இந்திய அரசு!

செவ்வாய், 18 ஜூலை 2023 (07:45 IST)
இந்தி மொழியை உலகம் முழுவதும் வளர்க்க ஐநா சபைக்கு இந்திய அரசு ரூபாய் 8.2 கோடி நிதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஒரே நாடு ஒரே மொழி என்ற வகையில் இந்தியா முழுவதும் இந்தியை வளர்க்க ஏற்கனவே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இந்தி மொழியை வளர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 8.2 கோடி ரூபாய் அதாவது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் ஹிந்தி மொழியை வளர்க்க ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. 
 
ஐக்கிய நாடு சபை தொடர்புத்துறை துணைச் செயலாளர் மெலிசா அவர்களிடம் 8.2 கோடிக்கான காசோலையை ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி ருசிரா என்பவர் வழங்கியதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்