கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸை தொடர்ந்து அமெரிக்காவில் மற்றுமொரு இந்திய வம்சாவளி பெண் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்திய வம்சாவளியான ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் அமெரிக்காவில் விண்வெளி பயணத்தை மேற்கொண்டவர்கள். அவர்கள் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான ஸ்ரீஷா.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் சோதனை முயற்சியாக 5 பேர் கொண்ட விண்வெளி குழுவை இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த குழுவில் இந்திய வம்சாவளி வீராங்கணையான ஸ்ரீஷாவும் இடம் பெற்றுள்ளார்.
கல்பனா சாவ்லாவிற்கு பிறகு இந்தியாவில் பிறந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது விண்வெளி வீராங்கனையாக ஸ்ரீஷா உள்ளார். நியூ மெக்சிகோவிலிருந்து யூனிட்டி22 விண்கலம் மூலமாக இன்று விண்வெளி வீரர்கள் புறப்பட உள்ளனர்.