சவப்பெட்டியில் இருந்த ’மம்மி ...ரிடர்ன்ஸ்...?சுவாரஸ்ய தகவல்

வியாழன், 29 நவம்பர் 2018 (13:49 IST)
எகிப்து நாட்டில் வானுயர்ந்த பிரமிடுகளும் அதனுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள  மம்மிகளும் உலகையே ஆச்சர்ய மூட்டுபவையாகும்.
இதுபற்றி ஹாலிவுட்டில் பல பிரமாண்ட திரைப்படங்கள் வெளிவந்து வசூலில் வாரிக்குவித்தன.
 
இந்நிலையில் இந்த மம்மி பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. மம்மி என்பது இறந்த ஒரு அரசரின் உடலை பல காலத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்க வேதிப்பொருட்களாலும், கடும் குளிராலும் பதப்படுத்தும் ஒருஇ முறையாகும்.
 
இதுபோல பல உயிரினங்களின் மம்மிகளையும் அகல்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்நிலையில் பிரெஞ்ச் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் எகிப்தில் உள்ள லக்சர் நகரில்  சமீபத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த மம்மியை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை அறிஞர்கள் செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பல உண்மைகள் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்