இந்தியாவைக் காரணம் காட்டி பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உயர்வுக்கு வேண்டுகோள்… இம்ரான் கான்!

வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:21 IST)
இந்தியாவில் பெட்ரோல் டிசல் விலை அதிகமாகிக் கொண்டே வருவதை எடுத்து சொல்லி பாகிஸ்தானிலும் விலையேற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் தினமும் பெட்ரோல் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இப்போது பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. ஆனால் நமது அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலைக் கம்மியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை பாகிஸ்தான் மதிப்பில் 250 ரூபாய் எனக் கூறி கண்டிப்பாக பாகிஸ்தானில் விலை ஏற்றம் செய்யவேண்டும் என நாட்டு மக்களிடம் அந்தநாட்டு பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில்தான் பெட்ரொல் விலை மிகவும் குறைவு எனவும் விலையை ஏற்றாவிட்டால் கடன் சுமை நம்மைக் காலி செய்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்