இந்நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இவரது பதவியேற்பு விழாவிற்கு, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவிற்கு மோடி அழைக்கப்படுவார் என செய்திகள் வெளியான நிலையில், மோடிக்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.