ஆப்கானுக்கு கடனாக வழங்கப்பட இருந்த ரூ.2,750 கோடி நிறுத்தம்

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:40 IST)
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டுக்கு நிதி உதவி நிறுத்தப்படுவதாக ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. 

 
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான் படைகள் புகுந்து அந்நாட்டின் தலைநகரை பிடித்து விட்டது என்பதும் தற்போது ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இதனிடையே, ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டுக்கு நிதி உதவி நிறுத்தப்படுவதாக ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட உள்ள தாலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். 
 
இதன் விலைவாக வரும் 23 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு கடனாக ரூ.2,750 கோடி நிதி வழங்க திட்டமிட்டிருந்தது தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்