அஷ்ரப் கனி-க்கு புகலிடம் கொடுத்த ஐக்கிய அரபு அமீரகம்

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (08:20 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பி ஓடிய அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட அனைத்து நகரங்களையும் தலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் தன்னுடன் கோடிக்கணக்கான பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியே வரும்போது பணம் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அபுதாபியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை அனுமதிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்