இன்கிலாந்தில் நடந்த மாணவர்களுடனான கலந்துரையாடலில் காஷ்மீர் பிரச்சனை குறித்த இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலில் தனது கருததைத் தெரிவித்தார். அதில் ‘பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவைவில்லை என்றே நான் கூறுவேன். காஷ்மீரை இந்தியாவிடமும் கொடுக்கக் கூடாது. காஷ்மீர் தனியாக சுதந்திரமாக இருக்கட்டும். குறைந்தபட்சம் மனிதமாவது உயிரோடு இருக்கும். மக்கள் இறக்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்கு காஷ்மீரை தேவையில்லை. பாகிஸ்தானால், அதன் நான்கு மாகாணங்களை கூட சரியாக நிர்வகிக்க முடியவில்லை. மனிதர்களின் இறப்பு, அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது மிகுந்த வலியைக் கொடுக்கிறது’ என தெரிவித்திருந்தார்.
அந்த கருத்துக்குப் பாகிஸ்தான் முழுக்க பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தான் அர்சியல் வாதிகளும் முன்னால் கிரிக்கெட் வீரர்களும் இது குறித்த தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாந்தத் ‘ கிரிக்கெட் வீரர்கள் அரசியல் பற்றி கருத்து தெரிவிக்கக் கூடாது. மேலும் அஃப்ரிடி பேசிய கருத்து சரியானது இல்லை. அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்’ எனதெரிவித்துள்ளார்.