2025ல் மீண்டும் கொரோனா வரும்? – ஹார்வர்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (08:21 IST)
தற்போது லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உலகையே முடக்கியுள்ள கொரோனா மீண்டும் 2025ல் வலுவடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் சில மாதங்களிலேயே உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலிக் கொண்டுள்ளது. மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவில் நிலைமை கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.

ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமான உயிர்பலிகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் சீனாவில் குறைந்துள்ள இந்த வைரஸ் நவம்பர் மாதம் முதல் மீண்டும் பரவ தொடங்கலாம் என சீன விஞ்ஞானிகள் சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஹார்வர்டு விஞ்ஞானிகள் கொரோனா குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா முழுவதும் கட்டுப்படுத்தப்படாமல் ஊரடங்கை தளர்த்துவது ஆபத்து என்றும், தற்போதைக்கு கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தாலும் 2025ல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்