பணையக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்! போரை நிறுத்துமா இஸ்ரேல்?

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:13 IST)
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் பணையக்கைதிகளை விடுவித்துள்ளது ஹமாஸ் அமைப்பு.



இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஏழாம் தேதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸின் ஆதிக்கத்திலுள்ள காஸா முனை மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காஸாவில் உள்ள தேவாலயம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலக அளவில் கண்டனங்களை பெற்றது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் அழைத்து வரும் நிலையில் இஸ்ரேல் அதை புறக்கணித்து தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஹமாஸ் பிடித்து சென்ற பணையக்கைதிகளை எந்த நிபந்தனையுமின்றி ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது. முன்னதாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியர் அல்லாத 4 பேரை விடுவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் பெண் வீரர் ஒருவர் உட்பட 3 பேரை விடுவித்துள்ளனர்.

ஹமாஸ் இறங்கி வந்து பணையக்கைதிகள் சிலரை விடுவித்துள்ள நிலையில் இஸ்ரேலும் காசா மீதான தாக்குதலை குறைத்துக் கொண்டால் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்