இதில், வன்முறை வெடித்ததை அடுத்து, படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், விமானப்படை தளம், பைசலாபாத்தில் இருக்கும் ஐஎஸ்ஐ அலுவலகம், ராவல்பிண்டியிலுள்ள ராணுவத் தலைமையகம் உள்ளிட்ட பலவற்றை அக்கட்சியினர் சேதப்படுத்தினர்.
இந்த வன்முறையில், 10 பேர் உயிரிழந்ததாக போலீஸார் கூறினர். இந்த நிலையில், அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதனால், அவரது தெஹ்ரீக்- இ-இன்சாப் கட்சியை தடை செய்வது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், இதுபற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. அக்கட்சியைத் தடை செய்ய அரசு தீர்மானித்தால், இத்தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.