”தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கமாட்டோம்”.. ராஜபக்‌ஷே கறார்

Arun Prasath

சனி, 21 டிசம்பர் 2019 (14:07 IST)
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நாங்கள் அதிகாரத்தை வழங்கமாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே கூறியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 2009-ல் இலங்கை அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷேவின் சகோதரரும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்‌ஷேதான் அப்போது ராணுவ மந்திரியாக இருந்தார்.

இதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மைத்ரியபால சிறிசேனா ஆட்சியின் போது, ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தில் இலங்கை ராணுவம் மீது போர்க் குற்றத் தீர்மானம் நிர்வேற்றப்பட்டது.

ஆனால் இந்த தீர்மானத்தை தற்போது நிறைவேற்றமுடியாது என அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே “தற்போதைய சூழ்நிலையில் இந்த தீர்மானத்தை அமல்படுத்த முடியாது, மேலும் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம், அது நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே நடக்கும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்