4ஜி , 5 ஜி- ல் குறைந்த விலை ஸ்மார்போன்... ரிலையன்ஸ் ஜியோவுக்கு கைகொடுக்கும் கூகுள் !

வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:32 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வோர்க்கிறகு இந்தியா முழுவதும் பலகோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அதிகப்பட்ட ஆஃபர்களை அளிப்பதன் மூலம் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவிற்கு மாறினர்.

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி குறைந்த விலையில் ஸ்மார் போன் தயாரிக்கவுள்ளதாகவும்,  இதற்கான ஆண்டிராய்டு இயங்குதளத்தை பிரபல நிறுவனமான கூகுள் தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத் திறன் கொண்டதாக இருக்கலாம் என தெரிகிறது. இதற்கான கூகுள் சுமர் 4.5 பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

முதற்கட்டமாக 10 கோடி ஸ்மார்ட்போன்களை ரிலையன்ஸ் சந்தைக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் குறிப்பிட்ட சில மாதத்திற்கு இலவச இணையதள சேவை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்