என் பெயர் என்னுடைய அடையாளம்; அதை மாற்ற மாட்டேன்! – செலின் கவுண்டர் விளக்கம்!

புதன், 11 நவம்பர் 2020 (14:58 IST)
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு வழிகாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செலின் கவுண்டர் பெயர் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது ஒருபக்கம் தமிழகத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜோ பிடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு குழுவில் தமிழக பூர்விகம் கொண்ட பெண் செலினா கவுண்டர் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது பெயரில் சாதி பெயர் சேர்த்து உள்ளது சமூக வலைதளங்களில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள செலினா கவுண்டர் “எனது அப்பா 1960களிலேயே அமெரிக்கா வந்துவிட்டார். அமெரிக்கர்களுக்கு நடராஜன் என்ற பெயரை உச்சரிக்க சிரமமாக இருந்ததால் தன் பெயரை கவுண்டர் என மாற்றிக் கொண்டார். திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பிறகும் கூட எனது பெயர் செலினா கவுண்டர் எனவே உள்ளது. என்னுடைய பெயர் என்னுடைய அடையாளம். அதை எதற்காகவும் நான் மாற்ற மாட்டேன்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்