‘ப்ளே பாய்’ இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற பெண் அமைச்சர்: வலுக்கும் எதிர்ப்பு

திங்கள், 3 ஏப்ரல் 2023 (16:42 IST)
பிளேபாய் இதழின் அட்டைப் பக்கத்தில் பெண் அமைச்சர் ஒருவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதை அடுத்து அந்த அமைச்சருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது 
 
பிளேபாய் என்ற கவர்ச்சி பத்திரிகையின் அட்டைப் பக்கத்திற்கு பிரான்ஸ் நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் போஸ் கொடுத்துள்ளார். ஒரு கவர்ச்சி பத்திரிகைக்கு அமைச்சர் ஒருவர் எப்படி போஸ் கொடுக்கலாம் என்று அவர் மீது கடுமையான வசனங்கள் எழுந்துள்ளன. 
இந்த நிலையில் பிளே பாய் கவர்ச்சி பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ள அவர் பெண்கள் உரிமை, கரு கலைப்பு உள்ளிட்ட 12 பக்க அளவில் ஒரு நீண்ட பேட்டியும் கொடுத்துள்ளார் என்றும் அந்த பேட்டியை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அவர் போஸ் கொடுத்து உள்ளார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
பெண்கள் தங்கள் உடலை கொண்டு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்யலாம் என்றும் பிரான்சில் பெண்கள் சுதந்திரமாக உள்ளனர் என்றும் சில பழமைவாதிகளுக்கு இது உறுத்தலாக இருக்கலாம் என்றும் அந்த பெண் அமைச்சர் பதிவு செய்துள்ளார். 
 
இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் கூறிய போது நாடு தற்போது இருக்கும் சூழலில் இந்த பிரச்சனை தேவையில்லாதது என்று கூறியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்