கனடாவில் வெளிநாட்டினர் சொத்து வாங்க தடை!

திங்கள், 2 ஜனவரி 2023 (21:51 IST)
கனடா நாட்டில் வெளி நாட்டினர் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடஅமெரிக்காவில் உள்ள ஒரு நாடு கனடா.  உலகின் மிக முக்கிய நாடான கனடாவில் பல வெளி நாட்டு முதலீட்டார்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும்  சொத்துகள் வாங்கினர்.

இதனால் ரியல் எஸ்டேட் துறையில்  வீடுகளும் நிலங்களும் அதிகளவில் உயர்ந்தது.

2022 ஆம் ஆண்டில் மட்டும் 20% சதவீதம் உயர்ந்தது. இதனால் அங்குள்ள வாடகை வீடுகளில் வாடகை  உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இவ்விலை உயர்வை கட்டுப்படுத்தும்  நோக்கில், அந்த நாட்டு அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, வெளி நாட்டைச் சேர்ந்தவர்கல் கனடாவில் சொத்துகள் வாங்க தடை விதிக்க முடிவு செய்துள்ளது அரசு.

ஆனால், கடனாவில் குடியேறி அங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என கூறியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்