தாக்குதல் நடத்திய நபர் மீது சூடான காஃப்பியை ஊற்றிய பெண் எம்பி,

சனி, 11 பிப்ரவரி 2023 (18:48 IST)
அமெரிக்காவில் பெண் எம்பி. ஒருவர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் மீது சூடான காபியை ஊற்றி தப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஆளும் ஜன நாயக கட்சியின் பெண் எம்பி ஆங்கி கிரேக்  நேற்று மமுன் தினம் வாஷிங்டனில் உள்ளா தன் குடியிருப்பில் உள்ள லிஃப்டில் சென்றபோது, திடீரென்று நுழைந்த நபர், கிரேக்கை தாக்கினார்.

அப்போது, தன்னிடம் இருந்த சூடான காஃபியை அவர் முகத்தில் ஊற்றிவிட்டும் அவரிடமிருந்து கிரேக் லேசான காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.

இந்தக் காஃபியின் சூடு தாங்க முடியாமல் அந்த நபர் அங்கிருந்து ஓடினார்.

இது அந்த நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, தாக்குதல் நடத்திய கென்ற்றிக் ஹாம்லின் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பெண் எம்பி கிரேக், காலை நேரத்தில் அருந்தும் காஃபி என்னை காப்பாற்றியது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்