விவாகரத்திற்குப் பின்..பவுலா ஹர்ட் என்ற பெண்ணுடன் பில்கேட்ஸ் காதல்?

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (22:34 IST)
பில்கேட்ஸ் மனைவியுடனான விவாகரத்திற்குப் பின், பவுலா ஹர்ட் என்ற பெண்ணுடன் நட்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா ஆகிய இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமீபத்தில் தனது மனைவியை அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.  எனவே இருவரின் விவாகரத்தும் இறுதி செய்யப்பட்டது.

திருமண பந்தத்தில் இருந்து மட்டுமே விலகுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை மூலம் தொண்டுப் பணிகளில் இருவரும் இணைந்து செயலாற்ற முடிவு செய்ததாகவும் ஏற்கனவே இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நிலையில், மைரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மனைவியுடனான விவாகரத்திற்குப் பின், பவுலா ஹர்ட் என்ற பெண்ணுடன் நட்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ALSO READ: மனைவியை விவகாரத்து செய்கிறார் பில்கேட்ஸ்: சட்டப்படி பிரிய முடிவு

பவுலா ஹர்ட் ஆர்க்கிள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு வசித்தவர் ஆவார். இவரது கணவர் 2019 ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இவருக்கு பில்கேட்ஸுடன் நட்பு ஏற்பட்டதால் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர்.  இதுகுறித்து, புகைப்படங்கள், வீடியோ வைரலான நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்