20 வயதில் கற்பம்: 16 வருடங்கள் தந்தை செய்த கொடுமை!!
வெள்ளி, 31 மார்ச் 2017 (11:47 IST)
பிரேசிலில் 20 வயதில் மகள் கற்பமானதால் அவளது தந்தை 16 வருடங்கள் வீட்டுச் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் 20 வயதில் கற்பமானதால் தந்தை தனது மகளை சிறிய அளவிலான வீடு ஒன்றில் எந்த ஒரு சுகாதாரமின்றி வீட்டுச் சிறையில் அடைத்துள்ளார்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பெண்ணை மீட்டுள்ளனர்.
கற்பமானதால் 16 வருடங்கள் வீட்டில் எந்த ஒரு வசதியும் இல்லாமல் பெரும்பாலான காலங்களில் இருட்டிலே இருந்துள்ளார் அந்த பெண்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.