ஒதுக்குப்புறமான கிராமங்களுக்கு ஃபேஸ்புக் ஒபன் சோர்ஸ்(Open Source) சேவை

வெள்ளி, 8 ஜூலை 2016 (12:01 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள இணைய பயனர்களுக்காக ஒபன் சோர்ஸ் தொடர்பபை வெளியிட உள்ளது.


 

 
உலகில் உள்ள அனைத்து இடங்களிளும் இன்டெர்நெட் நெட்வொர்க் சேவை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் ஒபன் சோர்ஸ் வயர்லெஸ் ஆக்ஸிஸ் வெளியீடை அறிவித்துள்ளது.
 
ஒபன் செல்லுலார் (Open Cellular) என்னும் இந்த சாதனத்தின் முதல் வடிவமைப்பு ஒரு ஷூ பாக்ஸ் அளவில் இருக்கும். இதன் மூலமாக 1,500 பேர் வரை 10 கி.மீ. தூரத்தில் இருந்து இணைய சேவையைப் பெறலாம்.
 
ஒபன் செல்லுலார் ஆக்ஸிஸ் பாய்ன்டின் வாயிலாக 2ஜி சேவையைப் பெற்று குரல் அழைப்புகள்(Voice Calling), எஸ்எம்எஸ் சேவைகள் மற்றும் எல்டிஇ(LTE) அல்லது வை-ஃபை(Wi-Fi) தொடர்பபையும் பயன்படுத்தி பயனடையாலாம்.  
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்