நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் வித்தியாசம் தெரியாத பேஸ்புக்

திங்கள், 12 செப்டம்பர் 2016 (11:29 IST)
நார்வே எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கில், வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.


 


அந்த புகைப்படம், ’கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க ஒரு நேபாள சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ஓடிவரும் காட்சி.’ஆகும். அந்த புகைப்படத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. இதனையடுத்து, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாத பேஸ்புக் நிறுவனம், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்தது.

இது போன்று தொடர்ந்து சர்ச்சை எழுந்ததால், தற்போது அந்த புகைப்படத்தை பதிவு செய்ய பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. அந்த புகைப்படத்தை எடுத்த உட் என்பவருக்கு புகைப்படத்துறையின் சிறந்த விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 
 
இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு தற்போது வயது 53 ஆகிறது. அவர் பெயர் கிம் ஃப்யூக். கனடாவில் வசித்துவரும் அவர்,1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். மேலும், அவர் 1997-ல் நிறுவனம் ஒன்றை துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்