பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், தான் பல கோடி ரூபாயை வரியாக செலுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.
உலக அளவில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் மற்றும் உள்நாட்டில் பண ரீதியான மோசடிகள் என பல குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விடுதலையாவதற்காக பல முயற்சிகளை சுகேஷ் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் கடிதம் ஒன்றை வழக்கறிஞர் மூலமாக எழுதியுள்ளார். அதில் அமெரிக்காவில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் மூலம் நடப்பு ஆண்டில் தான் ஈட்டிய ரூ.22,410 கோடியை இந்திய வருவாய் கட்டமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும், அதனால் ரூ.7,640 கோடியை வரியாக செலுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இது அவர் நேர்மையால் எழுதிய கடிதம் அல்ல, மாறாக தன்னை விடுதலை செய்வதற்காக மத்திய அரசிடம் விலை பேசும் விதமான முயற்சி என பலர் இதை விமர்சித்துள்ளனர்.
Edit by Prasanth.K