டிரம்புக்கு ரூ.190 கோடி நிவாரணம் தர ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு.. என்ன காரணம்?

Mahendran

வியாழன், 30 ஜனவரி 2025 (15:38 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கியதற்காக இந்திய மதிப்பில் 190 கோடி ரூபாய் நிவாரணம் தர பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் ட்ரம்பின் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடக்கப்பட்டது.
 
இதனை அடுத்து கோடிக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட தனது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் கணக்கு  முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு டிரம்ப் வழக்கு தொடர்ந்தார்.
 
தற்போது டிரம்ப் மீண்டும் அதிபராகிய நிலையில் இந்த வழக்கில் மெட்டா நிறுவனம் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்திற்கு மெட்டா நிறுவனம் எழுதிய கடிதத்தில் டிரம்ப் கணக்கை  முடக்கியதால் பாதிக்கப்பட்ட அவருக்கு 22 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 190 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால் இந்த வழக்கை விரைவில் முடித்துக் கொள்கிறோம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு எதிராக ட்ரம்ப் தொடர்ந்த வழக்கில் இது அவருக்கு மிகப்பெரிய வெற்றி ஆக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்