கருவில் இருக்கும் சிசுவுக்கு முதுகுத்தண்டு ஆபரேசன்: மருத்துவர்கள் சாதனை

புதன், 13 பிப்ரவரி 2019 (20:09 IST)
முதுகுத்தண்டு ஆபரேஷன் என்பது அதிக ரிஸ்க்கான ஆபரேசன் என்று கூறப்படும் நிலையில் இந்த ஆபரேசனை தாயின் கருவில் உள்ள சிசுவிற்கு செய்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
 
இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் என்ற பகுதியை சேர்ந்த பீதன் சிம்ப்சன் என்ற பெண் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவர் தனது வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியை கண்டறிய ஸ்கேன் செய்து பார்த்தார். அவரது வயிற்றில் உள்ள 20 வார சிசுவுக்கு தலைப்பகுதி சரியாக இல்லாததை மருத்துவர்கள் இந்த ஸ்கேன் மூலம் கண்டுபிடித்த்னர். முதுகுத்தண்டு பிரச்சனையால் தான் சிசுவின் தலைப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழந்தை பிறந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்ததால் அடுத்தகட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் குழு ஆலோசனை செய்தது. 
 
இந்த நிலையில் மருத்துவர்கள் குழு தீவிர ஆலோசனை செய்து சிசுவை தாயின் கருப்பையில் இருந்து வெளியே எடுத்து முதுகுத்தண்டு ஆபரேசன் செய்து மீண்டும் கருப்பைக்குள் வைக்க முடிவு செய்தனர். இதற்கு பீதன் சிம்ப்சன் ஒப்புக்கொண்டதை அடுத்து சிசுவுக்கு ஆபரேசன் செய்து மீண்டும் வெற்றிகரமாக கருப்பையில் வைத்து சாதனை புரிந்தனர். இனி அந்த குழந்தை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தாயின் கருப்பையில் வளர்ந்து சரியான நேரத்தில் பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்