மேலும் சென்னையில் உள்ள காற்றின் தர அளவுக்கு 600க்கும் அதிகமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் போகிப்பண்டிகையை கொண்டாடுவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் தேர்தல் வெற்றியின்போதும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசுகளை கொளுத்த வேண்டாம் என்று கூறாத சமூக ஆர்வலர்கள் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதம் செய்து வருகின்றனர்.