இந்தோனேஷியாவில் மீண்டும் நில நடுக்கம்

வியாழன், 8 டிசம்பர் 2022 (22:09 IST)
இந்தோனேஷியா  நாட்டில் சில  நாட்களாக தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியா நாட்டில் உள்ள மேற்கு ஜாவா  மாகாணத்தில் சிராஞ்ச்- ஹிலிர் என்ற பகுதிக்கு வடமேற்கில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாப பதிவாகியுள்ளது,
இந்த நில நடுக்கம்  தலை நகர் ஜகர்த்தா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாகவும், பல கட்டிடங்கள்  குலுங்கியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நில நடுக்கத்தின்போது, பயத்தில் மக்கள்  வீதிக்கு வந்து  நின்று கொண்டனர்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி  பயங்கர  நில நடுக்கம் ஏற்பட்டதில், 374 பேர் பலியாகினர், 600 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்