ஜப்பானில் அதிர்ந்தது பூமி; சுனாமி ஆபத்து உண்டா??

வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (09:27 IST)
ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்னும் தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவானதாக என தெரிகிறது.

பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குழுங்கின. அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிதளவில் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. மேலும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்