சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு இந்த விண்கலம் அங்கு சேர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்கலத்தில் நாசா விஞ்ஞானிகள் ஆன் மெக்ளெய்ன், நிகோல் ஏயெர்ஸ், ஜப்பானின் ஜாக்ஸா நிறுவனம் சார்ந்த டகூயா அனிஷி, ரஷியாவின் ரோஸ்கோமோஸ் நிறுவனத்தை சேர்ந்த கிரில் பெஸ்கோவ் ஆகிய நால்வரும் டிராகன் விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் பத்திரமாக இறங்கினர்.
மேலும் கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகியோரை பூமியில் இருந்து சென்ற விஞ்ஞானிகள் சந்தித்தனர். இந்த விஞ்ஞானிகள் உற்சாகமாக கைதட்டி சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் வரவேற்றனர். இந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில் மோர், டிராகன் விண்கலத்தில் அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவருடன் இணைந்து, மார்ச் 19ஆம் தேதி பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது.