உரிய ஆவணமின்றி வசிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு: அமெரிக்க அதிபர் முடிவு

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (06:19 IST)
பிற நாடுகளில் இருந்து உரிய ஆவணம் இன்றி அமெரிக்காவில் வசிக்கும் மக்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.



 
 
அமெரிக்காவில் பிறநாடுகளில் இருந்து வந்த சுமார் 8 லட்சம் பேர் உரிய ஆவணம் இன்றி வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒபாமா ஆட்சியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு குடியுரிமை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
ஆனால் அதிபராக டிரம்ப் பதவியேற்றது பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதோடு, அமெரிக்காவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. டிரம்பின் இந்த முடிவு ஆவணம் இன்றி வசிப்பவர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொதுமன்னிப்பு வழங்க டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளதால் 8 லட்சம் பேர்களும் விரைவில் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்