சீனாவை சேர்ந்த ஒருவருக்கு மூக்கில் அடிக்கடி ரத்தம் வந்துள்ளது. எனவே, பல மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்தும் அவருக்கு குணமாகவில்லை. எனவே, காது,மூக்கு, தொண்டை நிபுணர் ஒருவரிடம் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, அவரின் மூக்கை அந்த மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது அவர் மூக்கு துவாரத்தில் ஒரு அட்டை ஊர்வதை அவர் கவனித்தார். அதன் பின் அவர் அதை லாவகமாக வெளியே எடுத்தார்.