உலகின் மிக வயதான உயிரினம் எது தெரியுமா ? ஆச்சர்யமான தகவல்

வியாழன், 11 ஜூலை 2019 (18:47 IST)
இந்த பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிரிந்து பல லட்சக்கணக்கான உயிரினங்கள் பூமியில் தோன்றி பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்கின்றன. சில உயிரினங்கள் மறைந்து விட்டன. சில உயிரினங்கள் பல நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றதாகவும் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த பூமியில் வாழ்கின்ற  உயிரிங்களிலேயே மிக அதிக வயதான உயிரினம் க்ரீன்லாந்து ஷார்க் என்ற தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த கிரின் ஷார்க் உயிரினம் தோன்றி சுமார் 512 வருடங்கள் என ஒரு பிரபல தனியார் சேனலில் வெளியான ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
மேலும் அதன் செல்களையும் ஆராய்ந்து பார்த்தனர். அப்போது இதன் வயது 272 தான் ஆகிறது என்று தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது வாழும் உயிர் வாழ்விகளில் இந்த கிரீன் ஷார்க தான் மிக அதிகமாக வயதுடையது என்ற பெருமையை பெற்றுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்