நிலநடுக்கத்தால் உடைந்த அணை! திடீரென வெள்ளத்தில் மிதக்கும் சிரியா!!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:24 IST)
நிலநடுக்கத்தால் உடைந்த அணை! திடீரென வெள்ளத்தில் மிதக்கும் சிரியா!!
சிரியா நாட்டில் ஏற்கனவே நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் தற்போது முக்கிய அணை ஒன்று உடைந்து உள்ளதால் அந்த அணையில் உள்ள தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடாக இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
சிரியா நாட்டில் துருக்கி எல்லையில் ஒரேண்டஸ் என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிலநடுக்கம் காரணமாக சேதம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த அணை உடைந்து உள்ளது. 
 
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் குளிரில் இடிபாடுகளுக்கு இடையே மீட்பு படையினர் மீட்பு பணியை செய்து வரும் நிலையில் தற்போது வெள்ள நீரும் சூழ்ந்து கொண்டிருந்ததால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தாழ்வான பகுதியில் தங்கியுள்ள மக்கள் உடனடியாக மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரேண்டஸ் நதி துருக்கி சிரியா ஆகிய இரண்டு நாட்டின் மக்களுக்கும் குடிநீர் மற்றும் விவசாயத்தின் ஆதாரமாக இருந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக தற்போது அந்த அணை உடைந்து உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்