இதனையடுத்து இங்கு வளர்ந்த முதலைகள் இரண்டும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்கான்சென் ஆக்வரியம் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மக்களும் அதை பார்த்து போட்டோ எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்கேற்க வந்த 70 வயது தாத்தா ஒருவர், தன் கையிரண்டை பின்னால் கட்டிக்க்கொண்டு உற்சாகமாக பேசிக்க்கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் இருந்த கண்ணாடிக் கதவுகளீல் இருந்து வெளியே தலை நீட்டிய ஒரு முதலை அவரது கையை கடித்தது.