கடந்த சில நாட்களாக சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உள்ள மக்களை பெரும் அச்சுறுத்தி வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்படோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் சீனாவையும் தாண்டி அண்டை நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரானில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஈரான் நாட்டின் துணை சுகாதார மந்திரி துணை சுகாதார மந்திரியாக இருந்து வரும் அமைச்சர் இராஜ் ஹரீர்ச்சி என்பவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது