உலக அளவில் 2.4 கோடி, அமெரிக்காவில் மட்டும் 59 லட்சம்: கொரோனாவின் கோரத்தாண்டவம்

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (07:32 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.44 கோடியாக உயர்ந்துள்ளது என்பதும், அதாவது 24,322,426 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது என்பதும், உலக அளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.28 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1.68 கோடியானது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 லட்சமாக உள்ளது. அதாவது அமெரிக்காவில் மட்டும் 5,999,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 183,641 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,826 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,722,004 என்பதும், பலியானவர்கள் எண்ணிக்கை 117,756 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,307,749 என்பதும் பலியானவர்கள் எண்ணிக்கை 60,629 என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்