இந்நிலையில் சில நாட்களாக இந்த பிரச்சனை ஓய்ந்திருந்த நிலையில் இப்போது மீண்டும் தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளார் மீரா மிதுன். #AjithVijayprideofIndia என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ட்ரண்ட் செய்தனர். அதையடுத்து இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இது அஜித்துக்கு தெரியுமா. ஆம் அஜித் இந்தியாவின் பெருமைதான். ஆனால் உங்கள் நல்ல பெயரை கெடுத்துக்கொண்டு அஜித்தின் புகழை திருடப் பார்க்கிறீர்கள். ஓ இதுதான் கோலிவுட்டின் மாஃபியா செய்யும் வேலையா?’ எனக் கேட்டுள்ளார்.