இறக்குமதியான சிக்கனில் இருந்து கொரொனா... சீனா அதிர்ச்சி தகவல்

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (15:55 IST)
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோவால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகப் பொருளாதாரமும் சரிந்துள்ளது.

இந்நிலையில், பிரேசில் நாட்டிலிருந்து தென் சீன நகரான ஷென்சானுக்கு இறக்குசெய்யப்பட்ட சிக்கனில், கொரொனா வைரஸ் சோதிக்கப்பட்டதில் பாசிட்டிவ் முடிவுகள் தெரிந்ததாக சீனா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், கடல் உணவுகள் மற்றும் இறைச்சி, மீன் உணவுகளின் மாதிரிகளைப் பரிசோதித்ததில் இந்த முடிவுகள் கிட்டியதாக ஷென்சான் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே பெரியதலைவலியாக மனிதர்கள் மூலம் கொரோனா தொற்று பரவுவதுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சி பொருட்களில் கொரொனா தொற்று என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்