கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து அந்த படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார்.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை தபு நடித்திருந்தார். கதாநாயகனுக்கு இணையான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த தபுவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தெலுங்கில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அதற்காக பெருந்தொகை ஒன்றையும் சம்பளமாக தர தயாராக இருந்துள்ளனர். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தொடர்ந்து கதாநாயகியாகவும், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களும் நடித்து வந்த நயன்தாரா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் இல்லை என சொல்லியுள்ளதாக தெரிகிறது.