ஜி20 புறப்பட்ட அதிபருக்கு கொரோனா உறுதி! – பயணம் ரத்து!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (09:48 IST)
இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு புறப்பட்ட ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை தாங்கி அந்நாட்டில் நடத்தி வருகிறது. அவ்வாறாக இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. நாளையும் நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் பல நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இன்றே சில நாட்டு தலைவர்கள் இந்தியா புறப்பட்டுள்ளனர்.

அவ்வாறாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் இந்தியாவிற்கு புறப்பட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு பதிலாக துணை அதிபர் நடியோ கெல்வினோ, பொருளாதார மந்திரி, வெளியுறவு துறை மந்திரி ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என ஸ்பெயின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்