சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 169 நாடுகளில் பரவி விட்டது. உலகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் பல ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்தாலும் சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் இத்தாலி நிலைமை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் உயிர்பலி ஏற்பட தொடங்கிய நிலையில் கிடுகிடுவென பலி எண்ணிக்கை உயர்ந்து 6,820 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதிலும் 18,883 மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536 ஆக உள்ளது. தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து மதுரையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.