அமெரிக்காவை மரணங்களால் உலுக்கும் கொரோனா!

புதன், 17 பிப்ரவரி 2021 (08:22 IST)
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,376,781 என அதிகரித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
அதில் குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,376,781 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 4,99,778 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 18,478,390 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதாவது ஒரே நாளில் 1573 பேர் உயிரிழந்துள்ளனஎ. மரண எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்த வண்ணமே உள்ளதால் அங்கிருக்கும் மக்கள் இன்னும் பீதியிலே இருக்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்