இந்த தொடர் மழை காரணமாக ஈரானில் உள்ள அணைகளில் 95% நிரம்பிவிட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் வெளியுறவுத் துறை தலைவர் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “ அமெரிக்கா ஈரானுக்கு கிடைக்க வேண்டிய அவசர உதவிகளை தடுத்துள்ளது. இது பொருளாதார தடை அல்ல, பொருளாதார தீவிரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.