"மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள்: இந்தியாவுக்கு அமெரிக்கா வார்னிங்!

வியாழன், 28 மார்ச் 2019 (18:18 IST)
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.
 
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.
 
விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை இந்தியா மேற்கொண்டதாகவும், இந்தியாவின் இச்சோதனையை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் பேட்ரிக் ஷனாஹன் தெரிவித்தார்.
 
இது போன்ற சோதனைகளால் உருவாகும் கழிவுப்பொருட்கள், பொதுமக்கள் அல்லது ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை பாதிக்கலாம். மேலும், விண்வெளியில் உள்ள மற்ற பொருட்களுடன் மோதலாம்.
 
இந்தியாவின் சோதனையில் இருந்து உருவான, 250க்கும் மேற்பட்ட கழிவுப்பொருட்களின் பாகங்களை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. சோதனைக்கு பிறகு, உருவாகும் கழிவுப்பொருட்கள் குறித்து நாசாவும் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்