1891-ல் நடந்த கும்பல் கொலைக்கு மன்னிப்பு கேட்கும் அமெரிக்க நகர மேயர்

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (18:10 IST)
11 இத்தாலி அமெரிக்கர்களை 1891 ஆண்டு கொலை செய்ததற்காக மன்னிப்பு கேட்கப்படும் என்று அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகரம் அறவித்துள்ளது.
 
அதில் பாதிக்கப்பட்ட சிலர் போலீஸ் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதனால் கோபமடைந்த சில இனவாத கும்பல் அவர்களை தாக்கி, பொதுவெளியில் தூக்கிலிட்டனர்.
 
அமெரிக்க வரலாற்றில் இதுவே மிகப்பெரிய கும்பல் கொலை சம்பவமாக கருதப்படுகிறது. வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இதற்காக அந்நகர மேயர் லா டோயா மன்னிப்பு கேட்பார். இத்தாலிய - அமெரிக்க கலாசார மையத்தில் இந்த மன்னிப்பு கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்