மெக்ஸிகோ நாட்டில் வாழ்ந்த பழங்கால மக்கள் கூட்டமான மாயன் இனத்தினரின் கால கணக்கின்படி 2012ம் ஆண்டு உலகம் அழியும் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பலரால் நம்பப்பட்டு வந்தது, ஆனால் அந்த கோட்பாடு பொய்யென பின்னர் நிரூபனமானது. இந்நிலையில் மாயன் காலண்டர் கணக்கீட்டின்படி உலகம் அழிவது 2012ல் அல்ல, மாறாக 2020ல் என புதிய அதிர்ச்சியை கிளப்பி வருகின்றனர் சதி கோட்பாட்டளர்கள்.
மாயன் காலண்டருக்கும், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கிரிகோரியன் காலண்டருக்கும் இடையே ஆண்டுக்கு 11 நாட்கள் வித்தியாசப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது தற்போதைய காலண்டரை விட மாயன் காலண்டரில் 11 நாட்கள் கூடுதலாக உள்ளதாம். 1700களுக்கு முன்னர் வரை உலகில் பல்வேறு வகையான கால கணக்கீடுகள் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது கிரிகோரியன் காலண்டரே பயன்பாட்டில் உள்ளது.
ஆகவே கிரிகோரியன் மற்றும் மாயன் காலண்டருக்கு இடையிலான ஆண்டுக்கு 11 நாட்களை கணக்கிட்டால் அதன்படி 2012 என்பது 2020ம் ஆண்டு ஜூலை 21 என மாயன் காலண்டர் கணக்கில் அர்த்தமாவதாக சதிக்கோட்பாட்டாளர்கள் விவரித்துள்ளனர். இதனால் ஜூன் 21ல் உலகம் அழிய போவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பலர் பரப்பி வந்தாலும், 2012 போலவே இதுவும் பொய்த்து போகும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.