அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ட்ரம்பை தாமஸ் மேத்யூ க்ரூப்ஸ் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டார்.
அப்போது துப்பாக்கி தோட்டா டிரம்ப்பின் வலது காதை துளைத்துக் கொண்டு சென்றது. உடனடியாக டிரம்ப் காதை பிடித்துக் கீழே குனிந்த நிலையில், காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்மநபர் ஒருவரை போலீசார் பிடிக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதால் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், வீடு இன்றி தெருவில் வசித்து வந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.