இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததாக இந்திய ராணுவம் சில நாட்களுக்கு முன் குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்த சீனா, இந்திய ராணுவ வீரர்கள் தான் எல்லை பகுதியை கடந்து ஊடுருவியதாக தெரிவித்தது. சீனா வெகு காலமாக சிக்கிம் பகுதியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவ படைகளை அழிக்கும் வல்லமை உள்ளது, சிக்கிமை விட்டு இந்திய படைகள் வெளியேற வேண்டும் இல்லையென்றால் விரட்டியடிப்போம் என சீன நாட்டு பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.