பாப் ஸ்டார் ஜஸ்டின் பீபருக்கு சீனா அதிரடி தடை: காரணம் என்ன?

சனி, 22 ஜூலை 2017 (06:22 IST)
உலகப்புகழ் பெற்ற கனடாவை சேர்ந்த  பாப் ஸ்டார் ஜஸ்டின் பீபர் இனிமேல் சினாவில் பாட முடியாது. அவருடைய இசை நிகழ்ச்சிக்கு சீன அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. ஜஸ்டின் பீபர் தொடர்ச்சியாக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.



 
 
இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ஜஸ்டின் பீபர் உலகப்புகழ் பெற்ற திறமைமிக்க பாடகர் தான் என்றாலும் அவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பாடகராக இருந்து வருகிறார்.
 
சீனாவை பொறுத்த வரையில் அவர் தொடர்ச்சியாக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. சீனாவில் நடந்த முந்தைய இசை நிகழ்ச்சிகளில் அவர் மோசமாகவே நடந்துள்ளார். எனவே அவருக்கு சீனாவில் பாடுவதிலிருந்து தடை செய்கிறோம். இருப்பினும் அவர் தன்னுடைய நடத்தையை விரிஅவில் மாற்றிக் கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்